Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரி முதல் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

அம்மன் வடிவம் : மகேஸ்வரி

பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம் புரிதல்

மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி. சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி,

மூவகை குணங்கள்:

1 சாத்வீக குணம் : சாதவீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்ச்சி, பெருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

2. தாமசக் குணம் : தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

3. இராட்சத குணம் : இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம்,

மூரக்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள். அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள். மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவள்.

தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் வனதுர்க்கை ஆகும்.

வனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவர முடியாமல் தவிக்கின்றவர் ஆவார்.

எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளை போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.

  • அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை: மல்லிகைப்பூ மாலை
  • அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்
  • அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர: நிறம் சிவப்பு
  • அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள்: சிவப்புநிற பூக்கள்
  • கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.
  • நைவேத்தியம்: வெண்பொங்கல்
  • குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 2 வயது
  • பாட வேண்டிய ராகம் : தோடி
  • பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்
  • குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்: சுண்டல்

பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!