குரோதி வருட பலன்கள் 2024-கன்னி
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் உங்களுக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். கன்னி ராசியின் அதிபதி புதன். உங்கள் ஏழாம் இடத்தில் புதன் நீசம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். எனவே ‘நீசபங்க ராஜயோகம்’ பெறுகிறார். இந்த வருடம் பெரிய சந்தேகத்தோடு நல்லவை எல்லாம் நடக்குமா? என வருந்தும்போது நல்லென நடக்கும்.
ராசியில் அமர்ந்துள்ள கேது தொட்டதற்கெல்லாம் சந்தேகம் தருவார். இந்த சந்தேகம் கொடுக்கும் பயத்தை ராசி அதிபதி நீக்கி வருவதோடு மட்டுமல்ல, நன்மையும் தருவார். இந்த வருடம் உங்களுக்கு திருமணம் நடந்தால் அதன் மூலம் பெரும் செல்வம் சேரும். வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டம் ஏற்பட்டு வரவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம், வர்த்தகம் இவை யாவும் மிக மேன்மை தரும்.
உங்களது இளைய சகோதரருக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிக வேலைப்பளுவாள் அவர் அவதிப்படுவார்.உங்கள் நிறுவனத்துக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். உங்களின் பூர்வீக நிலத்தை விவசாய குத்தகைக்கு விட நல்ல ஆள் கிடைப்பார். இந்த வருடம் உங்கள் வீட்டை புதுப்பிப்பீர்கள். உங்கள் வீடு, மனை, வாகனம் இவைகள் உங்களுக்கு முதலில் ஒரு இறக்கத்தை கொடுத்துவிட்டு பின் ஏற்றத்தை தரும்.
காதல் விஷயங்கள் உங்களை ரத்தக் களரியாக்கும், பங்கு வர்த்தகம் மிக நஷ்டம் தரும், கலைஞர்கள் தொழில் மேன்மை பெற்றாலும் மறைமுக எதிரிகளால் இன்னல்கள் அனுபவிப்பர். கன்னி ராசியினர் வாரிசு மற்றும் கலை சம்பந்தமாக காவல்துறையிடம் சந்திப்பு நிகழ்த்த வேண்டி இருக்கும்.
கன்னி ராசியினர் ஒரு விபத்தை எதிர்கொள்வர். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உங்களை பயமுறுத்துவதற்காக கூறவில்லை சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். மேலும் இளம் வயது வேலைக்காரர்கள் உங்கள் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.
குரோதி வருட குரு பார்வை
இந்த வருடம் கன்னி ராசிக்கு வியப்பான அனுகூலம் தென்படுகிறது. ஒன்று பனிரெண்டாம் அதிபதி சூரியன் எட்டில் நின்று விபரீத ராஜயோகம் பெறுகிறார். இன்னொன்று எட்டாம் அதிபதி செவ்வாய், ஆறில் மறைந்து அவரும் விபரீத ராஜயோகம் பெறுகிறார். ‘கெட்டவன் கெட்டவன் கிட்டிடும் ராஜயோகம்’ என்னும் அமைப்பில் இரு யோகம் கிடைக்கிறது. எனவே இந்த கன்னி ராசியினர் எத்தகைய சிக்கல் வந்தாலும் அத்தனையிலிருந்து தப்பி விடுவர்.
விரையாதிபதி சூரியன் உச்சம் எனில் அதிக செலவு உண்டு. ஆனால் அவர் எட்டாம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம் பெறுகிறார். எனவே உங்கள் செலவு அலைச்சல் என அனைத்தும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அத்தனை அளவு வெற்றி உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.
பரிகாரம்
திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும்.
செவ்வாய்+சனி சேர்க்கைக்கு புதன்கிழமை வில்வமாலை, தயிர்சாதம் அகல் விளக்கில் 23 மிளகை பச்சை நிற துணியில் மூட்டை கட்டி தாமரை தண்டு திரியில் தீபம் பைரவருக்கு ஏற்றவும்.குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்