Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:தனுசு

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

2-ல் ராகு

2-மிட ராகுவால் பொருளாதாரம் வீண் விரயமாகும். வாக்கால் வம்பு வரும். வாக்கு ஸ்தானம் என்பதால் பேச்சால் சண்டை, சச்சரவுகள், தொல்லை உண்டாகும். கடன் சுமை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. பொய் சொல்ல நேரிடும். குடும்பத்தில் அமைதி இருக்காது. சில நேரம் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடும். பணம், படிப்பு, வருவாய் விஷயங்களில் மந்தம் உண்டாகும். நட்பு மற்றும் உறவில் விரிசல் உண்டாகும்.

8-ல் கேது

8-மிட கேதுவால் எதிலும் போராட்டமும், எதிர்ப்பும் இருக்கும். வீண்பழி சுமக்க நேரிடும். காரியங்கள் தடைபடும். உடல்நிலை பாதிப்பு, விபத்து, மருத்துவ வழி செலவுகள் அதிகரிக்கும். சுப காரியங்கள் அனைத்தும் தடைப்படும். நீங்கள் படும் கஷ்டங்களுக்கு தகுந்த பலன் கிடைக்காது. இக்காலத்தில் இருக்கும் இடத்தை விட்டு வெளியிடம் வாசம் செய்தால் ஓரளவு கஷ்டங்கள் நீங்கும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

பலன் தரும் பரிகாரம் : திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டு வரவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular