Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:விருச்சிகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:விருச்சிகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:விருச்சிகம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

3-ல் ராகு

எதிர்பாராமல் பல உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் மேன்மை அல்லது உயர்வு உண்டாகும். உங்களின் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள், புதிய தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியிடம், வெளிநாடு செல்வோருக்கு பயண வழி சிறப்புகள் கூடிவரும். வெற்றி கிட்டும், உல்லாச பயணங்கள் உண்டாகும்.

போக்குவரத்து, தகவல் தொடர்பு, எழுத்து, பத்திரம், விளையாட்டுத்துறை அனைத்திலும் நன்மை உண்டாகும். சுப காரியங்கள் கூடிவரும். மனமகிழ்ச்சி ஏற்படும் காலம்.

9-ல் கேது

9-மிட கேதுவால் கோயில், குளங்கள், யாத்திரை செல்ல நேரிடும். அல்லது இருக்கும் இடத்தை விட்டு வெளியிடம் செல்லும்படி நேரிடும். சுப செலவுகள் வந்து போகும். செலவுக்கேற்ற தொகையும் வரும். உயர் கல்வி படிப்போருக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து ,சுகங்கள், வீடு ,வாகனங்கள் வாங்க நேரிடும். வேதாந்தம், ஏகாந்தம், ஞானம் சித்திக்கும். தந்தை வழியில் ஆகாத செலவுகள் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம் : அருகில் இருக்கும் துர்க்கை ஆலயங்களுக்கு செவ்வாய் அல்லது ஞாயிற்று கிழமை ராகு கால நேரத்தில் வழிபாடு செய்வது நன்மை தரும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular