ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மீனம்
கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
11-ல் ராகு
11-மிடம் லாப ஸ்தானம் என்பதால் எதிர்பாராத லாபம் ஏற்படும். சுபகாரிய பலன்கள் கை கூடி வரும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரிடும். ஆசை, அபிலாசைகள் நிறைவேறும். தொழில் வழி உயர்வு, முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அந்நியர்களின் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் துணையும், தெய்வ ஆசீர்வாதமும் கிடைக்கும். பெரிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பிற சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். பாட்டன், பாட்டி வகையில் நன்மையான பலன்கள் ஏற்படும்.
5-ல் கேது
5-ல் கேது குழந்தை வழி செலவுகள் ஏற்படும். குலதெய்வ வழிபாடுகளும், அறிவுத்திறனை வளர்க்கும் செலவுகளும் ஏற்படும். தெய்வ பரிகாரங்கள் இக்காலத்தில் நல்ல பலன் தரும். ஆன்மீக வழி சிறப்பு, மகான்களின் சந்திப்பு ,ஆலய வழிபாடு இவற்றில் மன நாட்டம் ஏற்பட்டு நிறைவு பெறும்.
