Home108 திவ்ய தேசம்திவ்ய தேசம் 59:திருவெவ்வுள் (திருவள்ளூர்)

திவ்ய தேசம் 59:திருவெவ்வுள் (திருவள்ளூர்)

திருவெவ்வுள் (திருவள்ளூர்)

நின்றபடி அருள்பாலிப்பதை விட சயனம் பண்ணிக் கொண்டே அருள்பாலிப்பது பகவானுக்கு ரொம்பவும் பிடித்தம் என்பதை பெரும்பாலான பெருமாள் கோயில்களில் காணுகிறோம். திருமாலின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ. அவற்றுள் படுக்க இடம் கேட்டு பக்தரிடம் வந்து நின்ற சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இந்த அதிசயம் நடந்த இடம் சென்னைக்கு மேற்கே சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூரில் தான்.

பத்து ஏக்கர் பரப்பளவில் ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிராகாரங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கோயில்

மூலவர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள். புஜங்க சயனம்.

தாயார் கனகவல்லி வசுமதித் தாயார் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

விமானம் விஜயகோடி.

தீர்த்தம் ஹ்ருத்தாப நாசினி தீர்த்தம்.

வடலூர் இராமலிங்க அடிகளார் இத்தலத்தைப் பற்றி 5 பாசுரம் பாடியிருப்பது விசேஷமான செய்தி, பெருமாளுக்கு வைத்திய வீரராகவன் என்ற பெயரும் உண்டு.1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்தக் கோயில்.

சாலியோத்திர என்ற வயதான முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது வயோதிகராக வந்த திருமால், அவரிடம் உணவு உண்டு ‘படுக்க இடம் எவ்வுள்’ என்று கேட்டாராம் முனிவர் காட்டிய பரண்சாலையில் வயோதிகராக வந்த பெருமாள் – உண்மையாகவே சயனக்கோலத்தில் வீரராகவப் பெருமாளாகப் பள்ளி கொண்டாராம். அதனால் இத்தலத்திற்கு திருஎவ்வுள் என்று பெயர் வந்தது. பின்னர் திருவள்ளூராக மாறியது.

பெருமாள் தனது வலது திருக்கையை காலிஹோத்ர முனிவர் தலை மீது வைத்து, நான்முகனுக்கு உபதேசிக்கும் திருக்கோலத்தில் ஞான முத்திரை யோடு காட்சியளிக்கிறார். மூலவருக்கு சிவப்பு வெள்ளைக் கட்டம் போட்ட வஸ்திரம், வேண்டுகோளாக சாத்தப்படுகிறது. உப்பும் மிளகும் காணிக்கை செய்வதும் உண்டு. சிவபெருமான், தட்சனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இந்த தீர்த்தக் கரையில் நீங்கியது. இதனால் தீர்த்தக் கரையில் சிவன் கோயில் உண்டு. மது, கைடபர் என்னும் அரக்கர்களை பெருமாள் வதம் செய்த இடம் இது. இந்த கோயில் குளத்தில் அமாவாசையன்று நீராடினால் எல்லாவிதமான நோய்களும் அகலும். புண்ணியமும் அதிகமாகும். திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்கள்.

பரிகாரம்:

திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் திருமணமாகும். இங்குள்ள புஷ்கரணியில் அமாவாசை தோறும் வந்து நீராடினால் – எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களும் விலகும். எதிரிகள் பயத்தால் நிம்மதியற்றுக் காணப்படுகிறவர்கள் இந்தப் பெருமாளை தரிசனம் கண்டு நேரிடையாக வேண்டினால் அவர்களது பயத்தைப் போக்குவதோடு எதிரிகளையும் விரட்டி விடுவார் என்பது வெகு காலமாக இருந்து வரும் ஐதீகம். சிவபெருமானுடைய பிரம்மஹத்தி தோஷமே இங்குள்ள குளத்தில் குளித்ததால் விலகியது என்பதால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் செய்த அத்தனை பாவங்களும் விலக இந்த குளத்தில் நீராடினால் போதும் புண்ணியசாலியாக மாறி விடுவோம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular