அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி முதல் பாதத்தில் சூரியன் நின்றால்:
அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் பருமனான உடல் உள்ளவன்,
- வாதத்தில் வல்லவன்,
- தன்னம்பிக்கை உள்ளவன்,
- தீர்க்காயுள் உள்ளவன்,
- பணக்காரன்,
- தன் குழந்தைகள் மூலம் நிறைய நன்மை அடைபவன்,
- பித்த ரத்த சம்பந்தமான நோய்கள் உள்ளவன்.
அஸ்வினி முதல் பாதத்தில் சந்திரன் நின்றால்
- தாராள புத்தி,
- நல்ல செல்வாக்கு உள்ளவன்,
- பிறரிடம் கருத்து பரிமாற்றத்தால் நன்மை அடைபவன்,
- அரசு அல்லது தனியார் துறையில் உயர் பதவி வகிப்பவன்,
- இவன் பித்த தேகி,
- இதில் லக்னம் இருந்து குருவும் இருந்தால் 83 வயதுக்கு மேல் வாழ்பவன்
அஸ்வினி முதல் பாதத்தில் செவ்வாய் நின்றால்
- குள்ள வடிவம்,
- தொழிலும் சமூகத்திலும் உயர்மட்டம் வகிப்பவன்,
- ஆரோக்கியம் உள்ளவன்
- , இவனை தன் முன்னேற்றியாக பலரும் மதித்து நேசிப்பார்கள்,
- கணிதம் அல்லது பொறியியலில் பெரும் பட்டம் பெறுவான்
அஸ்வினி முதல் பாதத்தில் புதன் நின்றால்
- இவன் நாத்திகனாக இருப்பான்,
- பெரும்பாலும் தொழிலில் சமூகத்தில் கீழ் நிலையிலேயே இருப்பவன்.
- மது ,மாது இவற்றில் பெரும் ஆசை உண்டு.
- களவாணித்தனம் உண்டு.
- இந்த பாதத்தில் உள்ள புதனை குரு பார்த்தால் நல்ல பலன்கள் வாழ்க்கையில் நடக்கும்.
- இந்த நிலையில் இவன் பெரும் கல்வி அறிவு உடையவனாவான் வேதாந்தியாகவும் இருப்பான், ரகசிய சாதனை உடையவனுமாவான்
அஸ்வினி முதல் பாதத்தில் குரு நின்றால்
- வெகு புத்திசாலி,
- மெத்தப் படித்தவன்,
- மதப்பற்று, கடவுள் நம்பிக்கை, வேதாந்தம் இவற்றில் அதிக ஈடுபாடும், சாதனையும் உண்டு.
- நாவன்மையில் பேச்சு கவர்ச்சி உண்டு.
- இவன் சொற்பொழிவில் மக்கள் தேனில் ஈ விழுவது போல் மயங்கி வருவர்.
- 35 வயதுக்கு மேல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.
- நண்பர் உறவினர் மூலம் அதிக நன்மை பெறுவான்.
அஸ்வினி முதல் பாதத்தில் சுக்கிரன் நின்றால்
- பருமனான உடல் வாகு,
- சிரித்த முகம் உள்ளவன்,
- ஆயுள் குறைவு (எட்டாம் இடம் ஆயுள், தாயம் இவற்றை பொருத்தது)
- தீர்க்காயுள் ஏற்பட்டால் அந்தஸ்துள்ளவன்,
- கடல் வாணிபம், கடல் பொருட்கள் மூலம் லாபம் அடைவான்.
- இவன் கடல் கப்பல் பொறியாளராகவும் ஆவதுண்டு.
அஸ்வினி முதல் பாதத்தில் சனி நின்றால்
- இளமையில் வறுமை, பிற்காலத்தில் மகிழ்ச்சி ,செல்வம் உண்டு
- மந்தபுத்தி ,
- எதிலும் நிதானம்,
- நீடித்த ஆயுள் உண்டு.
- வரலாற்றுத் துறையில் ஆர்வம் உண்டு.
- பிற்காலத்தில் எழுத்தாளராவதுண்டு
அஸ்வினி முதல் பாதத்தில் ராகு நின்றால்
- புத்திசாலி
- ,பலவான்,
- தந்தையிடம் அதிக பற்று பாசம் உள்ளவன்.
- தன் மேலிருப்பவர்கள் பிறரிடமிருந்து உரிய நேரத்தில் உதவிகள் அடைபவன்.
- முகத்தில் நன்றாக தோன்றும் மச்சங்கள் உண்டு.
- இந்த ராகுவை அசுப கோள்கள் பார்வை அல்லது சம்பந்தம் ஏற்பட்டால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும் ஆனால் உயிருக்கு ஆபத்து இராது
அஸ்வினி முதல் பாதத்தில் கேது நின்றால்
- நல்ல படிப்பு உண்டு,
- இவன் நன்றாக செயல்பட்டு இறுதியான ஆக்கமான முன்னேற்றம் அடைவார்.
- மக்களிடையே பிரபலம் அடைபவன்.
- பொறியியல் துறையில் வல்லுனராக வழி உண்டு.