Homeநட்சத்திர ரகசியங்கள்மூலம் நட்சத்திரம் பலன்கள் | குணங்கள், திருமணம், தொழில், அதிர்ஷ்டம் & பரிகாரம்

மூலம் நட்சத்திரம் பலன்கள் | குணங்கள், திருமணம், தொழில், அதிர்ஷ்டம் & பரிகாரம்

மூலம் நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தொன்பதாவது இடத்தைப் பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள்
போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் யே, யோ, பா, பீ ஆகியவையாகும். தொடர் எழுத்துக்கள் பு, யூ ஆகியவையாகும்.

குண அமைப்பு:

மூல நட்சத்திராதிபதி கேது பகவானாவார். இது வாயுபுத்திரரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மிகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்கசீலர்கள். கம்பீரமானதோற்றமும், தெய்வ பக்தியும், எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள்.கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மிக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆண் மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம் என்ற பழமொழி வீண் பழிமொழிஎன்றுசொல்லாம். ஆனி மூலம் அரசாளும். அதாவதுஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வைசெய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனைபாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது.எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கிவைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல
உடல்வாகும் பேச்சுத் திறமையும் சிறப்பாக இருக்கும்.

குடும்பம்

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் குடும்பத்தில் பிரச்சினை களும் உண்டாகும் என்றாலும், வளர வளர குடும்பம் செழிக்கும். பெரியோர், தாய், தந்தை போன்றவர்களிடம் மரியாதை, பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். இவர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பாமருப்பது அனை வருக்கும் நல்லது. பலர் வயதான காலத்தில் மணவாழ்க்கையைத் துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோவில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களைத் தேடிப்போய் சரணடைவார்கள்.

தொழில் :

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம்,சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர்த் தளவாடங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்கள். நாட்டைப் பாதுகாக்கும் காவலர்கள் என்று மூல நட்சத்திரக்காரர்களைக் கூறலாம்.கொடிநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்துவிட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள்.பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த
அதிகாரிகளுக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரியபதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வுபெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுயதொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி,கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்றவற்றால் சிறந்த லாபம் கிட்டும்.

நோய்கள்:

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பைல்ஸ்,கல்லீரலில் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, இடுப்பு வலி,அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.

தசைப் பலன்கள்:

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் தசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 என்றாலும் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு மீதுமுள்ள தசா புக்திகளை அறியலாம். இந்த காலங்களில் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சினைகளும் உண்டாகும்.

இரண்டாவது தசையாக வரும் சுக்கிர தசை இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசுவாழ்வும் உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம்நடைபெறும். செல்வமும், செல்வாக்கும் பெருகும்.

மூன்றாவதாக வரும் சூரிய தசை 6 வருடங்களும்,நான்காவதாக வரும் சந்திர தசை 10 வருடங்களும்
நடைபெறும் என்பதால், இந்த காலங்களில் நன்மைதீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடல் சிறுசிறு பாதிப்புகள்தோன்றி மறையும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஐந்தாவது தசையாகும். செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும், இது மாரக தசையாகும். செவ்வாய் பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் வாழ்வில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.

ஸ்தல விருட்சம்:

மூல நட்சத்திரக்காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தினை ஜூலை மாதத்தில் கும்ப லக்னம் உதயமாகி 4 நாழிகை கழித்து நள்ளிரவில் விண்ணில் சுடர்விடுவதைக் காணலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பொழிச்சலூர்:

சென்னைக்கு தெற்கில் பல்லாவரத்துக்கு மேற்கில் 3. கி.மீ தொலைவிலுள்ள அகஸ்தீசுவரர்-ஆனந்தவல் அருள்பாலிக்கும் ஸ்தலம்.

திருமாந்துறை:

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு மேற்கில் 5.கி.மீ தொலைவில் உள்ள வடக்கரை மாந்துறை எனப்படும் ஆம்ரவன ஈஸ்வரர், அன்னை அழகம்மை ஆலயம்.

மயிலாடுதுறை:

மயூரநாதர் அபயாம்பிகையுடன் அருள்பாலிக்கும் ஸ்தலம்.

குலசேகரப்பட்டினம்:

திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவிலுள்ள விஜயகாசி கொண்ட பாண்டீசுவரர்- அறம்வளர்த்த நாயகி அருள்புரியும் திருத்தலம்.

ஆச்சாள்புரம்:

சீர்காழிக்கு அருகிலுள்ள சிவலோகத் தியாகேசர் அருள்புரியும் ஸ்தலம்.

பாமணி:

பாதாளேச்சுரம் எனப்படும் இத்தலம் மன்னார்கு டியிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சர்பதோஷம் நீக்கும் ஆலயமாகும். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

செய்யவேண்டிய நற்காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்துண்பது, தானியம் வாங்குவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ மாருதி ப்ரசோதயாத்.”

பொருந்தாத நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular