நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு
அம்மன் வடிவம் : வராஹி
பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல்.
வராஹி வடிவம் : வராக முகம் கொண்டவள். பெரிய சக்கரத்தை கரங்களில் கொண்டவள்.எட்டு கரங்களை உடையவள். கோபத்தின் எல்லையை கடந்தவள். ஆனால், அன்பிலோ அனைவருக்கும் ஆதாரமானவள். அம்பிகையின் படைக்கு படைத்தளபதியாக இருக்கக்கூடியவள். மங்கல மய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள்.
வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராஹி என்று அழைக்கப்படுகிறாள்.
தென்நாட்டில் மூன்றாம் நாள் வணங்கப்படும் நேவியின் அம்சம் ஜாதவேதோ துர்க்கை.
முருகனின் தோற்றத்திற்காக சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் பிறந்தன. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை அக்னி மற்றும் வாயு தேவருக்கு மறைமுகமாக அளித்து கங்கை நதியில் சேர்த்ததால் இந்த நுர்க்கைக்கு ஜாதவேதோ துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது.
- அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : சம்பங்கி
- அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை :மரு
- அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு நிறம்
- அன்னையின் அலங்காரம் : கல்யாணி நுர்க்கை அலங்காரம் மற்றும் கஸ்தூரி,
- அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர் : அரளி,
- கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
- நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.
குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது 4 வயது.
- குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : பகை அழியும்.
- பாட வேண்டிய ராகம் : காம்போதி
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி: வீணை
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : துவையல்
பலன் :எதிரிகளிடத்தில் இருந்துவந்த பயம் நீங்கி தன தான்யத்துடன் சிறப்பான வாழ்வு