அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!
இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.
குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே!!! உங்கள் 6-வது ராசியில் ஆடம்பரமாக இந்த புத்தாண்டு பிறப்பதால், தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீட்டில் இதுவரை நிலவி வந்த இறுக்கமான சூழல் மறையும். உறவுகளுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பது தவறில்லை ஆனால் தலைக்கனம் என்கிற தலைப்பாகை அணிந்து கொண்டு நடக்க வேண்டாம். வாழ்க்கை துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். அவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.அசையா பொருள்கள் சேர்க்க ஏற்படும். பழைய கடன்கள் சுலபமாக பைசல் ஆகும். அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. சொத்து சார்ந்த வழக்குகளில் சமூகமான தீர்வு கிட்டும். சகோதர உறவுகளால் சாதகங்கள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கக்கூடிய வருஷமாக இந்த வருஷம் இருக்கும். நாவடக்கத்தை மற்றும் கடைப்பிடித்தால் நடப்பதெல்லாம் நன்மையாகவே இருக்கும். மணமாலைக்காக காத்திருந்தவர்களுக்கு இஷ்டப்படியே இல்வாழ்க்கை அமையும். தாயாகும் பாக்கியம் கிட்டுமான்னு ஏங்கின உங்களுக்கு மடிசுமந்து பெற்று தொட்டிலிட்டு தாலாட்டும் பேறு கிட்டும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசினால் உங்கள் மதிப்பு கூடும்.
அமைதியும் அடக்கமும் இருந்தால் அனைத்தும் அனுகூலமாக கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். பணியிடத்தில் உங்கள் பெருமை உணரப்படும். அதே சமயம் துணிவை விட பணிவு தான் எந்த சமயத்திலும் உயர்வு தரும். தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் படிப்படியாக கைகூடும். அதில் அவசரமும் புலம்பலும் கூடாது. உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பதும், திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுவதும் அவசியம். சிலர் புதிய பணிக்கு மாறும் வாய்ப்பு உண்டு. எந்த சமயத்திலும் கவனமும் கட்டுப்பாடும் இருந்தால் ஏற்றமும் மாற்றமும் எதிர்காலத்திலும் தொடரும்.
குருபகவான்30.04.2024 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மகளின் கல்யாணத்தை ஒரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
குரு பகவான்01.05.2024 முதல் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்கள் கடும் பிரயத்தனத்துடன் முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். புதிதாக ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.
ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் வருடம் முடியும் வரை அமர்கிறார்கள். எனவே மனக்குழப்பும், பேச்சில் தடுமாற்றம், எதையோ இழந்தது போல் ஒருவித கவலைகள், பதற்றம், தலைச்சுற்றல், பல்வலி வந்து நீங்கும். தியானம், யோகா போன்றவை அவசியம். ஆன்மீக வழிபாடுகளில் மனதைச் செலுத்துவதால் நிம்மதி உண்டாகும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு சென்று வருவீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து போகவும்.
இந்த ஆண்டு முழுக்க விரயச்சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனதை வாட்டும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பி விடுவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களின் பொருட்டு செலவுகள் அதிகரிக்கலாம். அதே போல் பிள்ளைகளின் படிப்பு செலவுகளும் உண்டு.
பலன் தரும் பரிகாரம்
ஒருமுறை ஸ்ரீரங்க ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து விட்டு வந்தால் வாழ்க்கை இனிமையாகும்.
மொத்த பலன் : புயலுக்கு பின் அமைதி