மிதுனம் -அதிஷ்டம்
(மிருகசீரிடம் 3,4,திருவாதிரை ,புனர்பூசம் 1,2,3)
புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசிக்காரர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் இருந்த சனிபகவான் இப்போது ஒரு ராசிக்கு 9 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமருவதால் இனி எல்லாவற்றிலும் வெற்றிதான். சகல பாக்கியங்களும் உண்டாகும். கடந்த மூன்று ஆண்டுகள் அஷ்டம சனி உங்களுக்கு பலவிதமான கசப்பான அனுபவத்தையும், பயத்தையும் தந்திருக்கலாம். சிலர் நோயால் படாத பாடுபட்டு இருப்பீர்கள். சிலர் நல்லது செய்து கெட்டதை பரிசாக வாங்கி இருப்பீர்கள். திடீர் வேலை இழப்பால் வருமானம் இல்லாமல் துன்பப்பட்டு இருப்பீர்கள் ஆனால் இனி இந்த நிலை எல்லாம் மாறப்போகிறது.
இறையருளால் இனி எல்லாம் ஜெயமே! இது உங்களுக்கு யோக காலமாகும். இனிமேல் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி மூலம் எல்லா காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனை தீர்க்க வழி பிறக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளி பிரச்சனை தீரும்.
பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். செய்யும் செயலில் பேரும் புகழும் கிடைக்கும். உத்தியோக உயர்வு பதவி உயர்வு உண்டாகும். மனதிற்கு சந்தோசம் தரும் நிகழ்வுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைத் தரும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலர் மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஏதோ ஒரு வகையில் பண வரவு வந்து கொண்டே இருக்கும். அரசு அனுகூலம் உண்டாகும்.
சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இல்லத்தரசிகள் தங்க நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணி நிரந்தரம் உறுதியாகும். மாணவ மாணவிகள் உயர்கல்விகள் சாதனை படைப்பார்கள்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பகவான் அருள் பெற தானம் செய்யும் முறை
உணவகம், கூல்டிரிங்ஸ், முடி திருத்தம், மெடிக்கல், பேங்க், ஆசிரியர் மற்றும் கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி மற்றும் எண்ணெய் தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு இனி நல்ல காலம் தான் உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்து கொள்ள மேல் அதிகாரி மாற்றலாகி வருவார். இதுவரை கிடைக்காத நியாயமான சலுகைகள் இனி கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்டு செயலாற்றவும். இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலுவலகத்தில் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம் அதனால் வீன் அலைச்சலும், மன உளைச்சலும் உண்டாகும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் தோல்வியை தழுவுவார்கள். சிலருக்கு பணி மாற்றம் ஏற்படும். கோர்ட் கேஸ் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டை (11) பார்ப்பதால் மூத்த சகோதரர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பர்சனல் விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும்.
பலன் தரும் பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் வீட்டருகே இருக்கும் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுங்கள். ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்யுங்கள்.