Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 10 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 10 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 10

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

தோடி ராகம், ஆதிதாளம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்; பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற -ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை

எளிய தமிழ் விளக்கம்:

நோன்பு நோற்றுச்சுகம் அனுபவிப்பவளே! வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் நறுமணமுள்ளதுளசிமாலையைச் சூடிய நாராயணனாகிய, நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனால், ராமாவதாரத்தில் யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ?எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே, தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai -10 – Raga: Todi, Adi

O cousin entering high heaven through vows
will you not answer nor open the doors ?
In the days of yore, Kumbhakarna fell into the jaws of death
through our blessed boom giver, Narayana who wears the
fragrant Tulasi on his head
But did the demon then bequeath his sleep to you ?
O rare gem of immense stupour
Come quickly, open the door.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!