சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

கும்பம் -கடமையை செய் பலன் தானாக வரும்

(சதயம் ,பூரட்டாதி 1,2,3,அவிட்டம் 3,4)

சனிபகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து இருந்து சனிபகவான் இப்போது உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக விரைய சனியாக பலவிதமான நெருக்கடிகளையும், எதிர்பாராத செலவுகளையும் தந்த சனிபகவான் தற்பொழுது உங்களுக்கு ஜென்ம சனியாக வருவதால் சில நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் தரவே செய்வார். ஆனால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் உங்களை அடுத்த கட்டத்திற்கு வாழ்வில் கொண்டு செல்லவே என்பது பொறுமையாகத்தான் புரியும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம்

எந்த கஷ்டமும் வராமல் வெற்றியை பெற முடியாது என்பதால், இவை அனைத்தும் சோதனை அல்ல சாதனை என்பது புரியும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. கூட்டத்தொழில் தொடங்கக்கூடாது. முக்கியமாக வேலையில் பிரச்சனை வந்தால் நீங்களாக வேலையை விடக்கூடாது. வண்டி, வாகனப் பழுதை உடனுக்குடன் சரி பார்த்துக் கொள்வது நல்லது. வெளியில் எங்கு சென்றாலும் கையில் சஞ்சீவி ஆஞ்சநேயர் படத்தை வைத்துக் கொள்வது நல்லது. கால பைரவாஷ்டகம் மாலையில் தினமும் படிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் மனம் அடிக்கடி கவலையில் சிக்கிக் கொள்ளும் அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள பிரதோஷ நாளில் நந்தியையும், சிவபெருமானையும், சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரையும் தொடர்ந்து வழிபடும் போது சனிப்பெயர்ச்சியால் எந்த பாதிப்பும் வராது என நம்பலாம். சனி பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று இருப்பதால் பெரிய அளவில் கெடுதல் செய்ய மாட்டார். உங்களுக்கு அனுபவத்தை தந்து அதன் மூலம் பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவார்.

ஜென்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வரும் அதனால் அலைச்சல் இருக்கும். அயல்நாடு செல்ல விசா காலதாமதமாகி கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும். மகனின் கோட நட்பு விலகும். புது வீட்டிற்கு சிலர் குடி போவீர்கள். வண்டி வாகன வகையில் தேவையில்லாத செலவுகள் வரலாம். மனதில் பலவிதமான தேவையில்லாத சிந்தனைகள் வந்து போகும் எதையும் பொறுமையாக செய்வது நல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புது தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம் அதனால் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனதில் திடீர் தேவை இல்லாத பயம் கவலை வந்து போகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வேலையில் பிரச்சனை வரலாம்.

இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி திருத்தலங்கள்- வட திருநள்ளாறு

அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உற்சாகத்தை தரும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. இல்லத்தரசிகளை பொறுத்தவரை சேமிப்பு கரையும். ஆயினும் வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை பணிச்சுமை குறையும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளை பொறுத்தவரை யாரிடமும் கடன் வாங்காமல் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணிக்கடை, விவசாயம், காய்கறி கடை, எலக்ட்ரானிக் கடை, பிளம்பர் தொழில், பேக்கரி தொழில் செய்வோருக்கெல்லாம் நல்ல லாபம் வரும். உத்தியோகஸ்தர்களை பொறுத்த வரை வேலையை விடும் அளவிற்கு நெருக்கடி இருக்கும். அதனால் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். ஐ.டியில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

சனிபகவான் பார்வை பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3, 7, 10-மிடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026-கும்பம்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் எந்த ஒரு செயலை முடிக்கவும் கடுமையான முயற்சி செய்ய வேண்டும். சிலருக்கு வெளியூரில் வேலை அமையும். இளைய சகோதரர் வகையில் செலவுகள் இருக்கும்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் சொந்தக்காரர்களால் கணவன் மனைவிக்கு பிரச்சனை ஏற்படும்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் உண்டு. கடன் வாங்கும் நிலை உண்டாகும். இந்த சனிப்பெயர்ச்சி பொறுத்தவரை சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் ஓரளவு வருமானத்தையும் வசதிகளையும் பெறலாம்.

பலன் தரும் பரிகாரம்

தேய்பிறை சனிக்கிழமை சனி ஓரையில் திருநள்ளாறு சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள் 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 பேருக்கு அன்னதானம் செய்யுங்கள் சனியின் பாதிப்புகள் குறையும்.

Leave a Comment

error: Content is protected !!