Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026-மிதுனம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

8-ல் ராகு

மருந்து செலவு, மருத்துவ செலவு, விஷ ஜுரம், விஷ சந்துக்களால் ஆபத்து உண்டாகும். வம்பு, வழக்கு பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வழியில் நஷ்டமும், போராட்டமும் ஏற்படும். வெளியிடம், வெளிநாடு சென்று கஷ்டப்பட நேரிடும். போலீஸ், கேஸ், கோர்ட் என்று தேவையற்ற வம்புகள் வரும். கவனமுடன் கையாள வேண்டும். உறவுகள் பகைக்கும், பலருடைய பகை உண்டாகும்.

வாயு, நரம்பு, சிறுநீரகம், கொழுப்பு சம்பந்தமான நோய்களும் ஏற்படும். முன்னோர் வழி சொத்து, சுகங்கள் விரையமாகி அவர்கள் வழி செலவுகளும் உண்டாகும். எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை.

2-ல் கேது

குடும்பப் பிரச்சினைகள், பிரிவினை ஏற்படும். குடும்ப அமைதி இருக்காது. வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பொருள் விரையம் ஏற்படும். பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். வியாக்கியானம், மந்திர ஞானம், ஆன்மீக உயர்வு,போதனைகளை மனம் நாடும்.

பல் வலி, பல் வீக்கம் போன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.

பலன் தரும் பரிகாரம் :

ஒரு முறை ஸ்ரீ காளஹஸ்தி சென்று வழிபட்டு வரவும்.பொதுவாக உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular