அடிப்படை ஜோதிடம்-பகுதி-57-11-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்-பராசரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

11-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்-பராசரர்

11-ம் பாவாதிபதி (11th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் உண்மையிலேயே சுகம் இல்லாமலும், பணக்காரராகவும், மகிழ்ச்சி, கண்ணால் பார்த்துக் கொண்டு சந்தோஷம் அடைந்தலும், கவிஞராகவும், சொல்லாற்றல் மிக்க பேச்சாளராகவும், எப்போதும் நன்மை/ லாபத்தை கொடுப்பவராகவும் இருப்பார்.
 
11-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பலவிதங்களில் சம்பத்தை கொடுப்பார். பலவிதமான பூர்த்தியடைந்த ஸ்தாபனங்களுக்கு  உதவும் கரங்கள், கருணை இல்லங்கள், தர்மசாலைகளை ,  மதம் சம்பந்தமானவைகள்  போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும்  எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்.
 
11-ம் பாவாதிபதி மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் வேலைகளில் திறமையாக செயல்படுபவர். சகோதர தன்மையுடன் நடந்து கொள்வார்.மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். சில சமயங்களில் முடக்குவாதம் போன்றவற்றினால் துன்பமும் அடைவார்.
 
11-ம் பாவாதிபதி நாலாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் அடைவார் . ஆன்மீக தலங்களை சென்று  சந்தோஷமடைவார் . வீடு, நிலங்கள் போன்றவற்றின் மூலம் லாபம் கிடைக்கும் 
 
11-ம் பாவாதிபதி (11th House in Astrology) ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகரின் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், கல்வியறிவு பெற்றும் , நல்ல குணங்களைப் பெற்றிருக்கும், ஜாதகர்  தெய்வ பக்தியுடனும் சந்தோஷமாகவும் இருப்பார்.
 
11-ம் பாவாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நோய்களினால்  கொடூரமாக பாதிக்கப்படுவர் . வெளியிடங்களில் வசிக்கும்  நிலைமையும் எதிரிகளால் தொல்லைகளும் ஏற்படும் .
 
11-ம் பாவாதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் ஜாதகர் எப்போதும் மனைவியின் உறவுகளின் மூலமாக ஏராளமான நன்மைகளை பெறுவார் . நல்ல குணம், மனைவியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்
 
11-ம் பாவாதிபதி எட்டாமிடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய முயற்சிகளில் பின்னடைவார் . நீண்டநாள் வாழ்வார். அதே நேரத்தில் தன்னுடைய மனைவி அவருக்கு முன்னரே இறந்து விடுவார்.
 
11-ம் பாவாதிபதி (11th House in Astrology) 9ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலி, திறமையானவர், நேர்மையானவர், மரியாதைக்குரியவர், அரசுகூட பணம் செறிந்த  நிலையில் ஜாதகர் இருப்பார்.
 
 11-ம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அரசாங்கத்தால்  மரியாதை செய்யப்படுவார். நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கம் முதலியவற்றையும், தன்னுடைய மதத்தின் ஒத்துழைப்பையும் பெற்றிருப்பார். நுண்ணறிவும் நேர்மையும், தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி ஆளும் திறமையும் இருக்கும்
 
11-ம் பாவாதிபதி
 
11-ம் பாவாதிபதி11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய முயற்சிகளில் பயனடைவர். மேலும் முயற்சிகளின்  மூலம் நன்கு கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாகவும் இருப்பார்.  நாளுக்கு நாள் லாபம்/நன்மை அதிகமாகிக் கொண்டே வரும்
 
11-ம் பாவாதிபதி(11th House in Astrology) பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் எப்பொழுதும் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வார். புலனடக்கம் இல்லாமல் இருப்பார். அதிகமான மனைவிகள் பெற்றிருப்பார். அதிகம் வெளிநாட்டில் வசிப்பவர்களாக இருப்பார்கள் .

Leave a Comment

error: Content is protected !!