பரணி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

பரணி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி நட்சத்திரம்(barani natchathiram )  நான்காம் பாதம் மேதினி எனப்படும் செவ்வாயான(மேதினி-பூமி-பூமிகராகன்(செவ்வாய்)இதனால் செவ்வாய் மேதினி எனப்பட்டான்) விருச்சிக அங்கிஷத்தில் பிறந்தவன்

  • வீரப்பட்டயம் அணிந்த தோளினை உடையவன்.(இக்காலத்தில் படையினர் சொக்கயில் கையில் மெல் பக்கம் இருக்கும் குறியீடுகள்(Cross)என்பவை போடப்படுவதும் இது போலத்தான்.
  • இவன் படை காவல் துறையில் பணியில் சேர்ந்து அதற்கு தலைவனாகவும் இருப்பான்.
  • நறுக்குத் தெறித்தால் போல் பேச வல்லவன்.
  • இவனுக்கு கோபம் முன்னாள் துரத்திக்கொண்டு வரும்.
  • நல்ல சிறந்த சிறிய குடும்பத்தை சார்ந்தவன்.
  • இவன் உருவத்தால் அழகன்
  • மெட்டு வைத்துப் பாடும் இசைத்துறையில் தேர்ந்தவன் என்று பொருளாகும்.

பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 4ம் பாதத்தில் கோள்கள் நின்ற பலன்

பரணி 4ம் பாதத்தில் சூரியன்நின்றால்:

  • இளமை பருவத்தில் மிகவும் கஷ்டப்படுவான்.
  • தந்தை இளமையில் தவறலாம்.
  • மற்ற கிரகங்கள் நன்கு அமைய வில்லை என்றால் இவன் பிச்சை எடுக்கவும் நேரிடலாம்.
  • ஒரு கிரகம் மட்டுமாவது நன்கு அமைந்தால் இவனுக்கு நல்ல வாழ்வும் உதவியும் அமையும்.

பரணி 4ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்:

  • இவன் தன் நாட்டில் மிக உயர்ந்த பதவி வகிப்பன்.
  • இவனுக்கு பல வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். அவற்றில் எச்சரிக்கை தேவை.
  • ஏதாவது வெளிநாட்டு பயண விபத்தில் உயிரிழக்க நேரலாம்.
  • இவன் சிறந்த மருத்துவராகவும் இருப்பான்.
  • அதே சமயத்தில் பெண்கள் தொடர்பால் கொடிய பால்வினை நோய்களும் ஏற்படலாம்.

பரணி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 4ம் பாதத்தில் புதன் நின்றால்:

  • இவன் ஒரு அரசு உத்தியோகஸ்தர்
  • இவனுக்கு அறுவை சிகிச்சையால் வடு ஏற்படும்.
  • 45 வயதுவரை வாழ்க்கை சுகமாக ஓடும்.அதன்பின் சாதாரண காலம்
  • பொறியாளனாகவும் வேலை இருக்கலாம்.
  • காக்காய் வலிப்பு, முதலிய நோய்கள் காணலாம்.

பரணி 4ம் பாதத்தில் குரு நின்றால்:

  • பெரும்பாலும் பயிர்த்தொழில் மூலம் சம்பாத்தியம்
  • பயண தொழிலில் வல்லவன்(Travel Agent)
  • இவனுக்கு மந்திரசித்தி உண்டு

பரணி நட்சத்திரம்

பரணி 4ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:

  • பெரும்பாலும் இவன் வெளிநாடுகளில் வசிப்பவன்.
  • சமய சாஸ்திரங்கள் படிப்பவன்.
  • புத்தகப்பிரியன்.
  • இவன் கோயில் அர்ச்சகராக பணி செய்து அதனால் வரும் நிவேதன அன்னத்தால் வாழ்பவன்.
  • பெரும்பாலும் இவன் வயிற்றுப் பிழைப்பே கோயிலில்தான் நடக்கலாம்

பரணி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 4ம் பாதத்தில் சனி நின்றால்:

  • இவன் 35 வயது வரை பிறரிடம் கையேந்தி பிழைப்பான்.
  • இளமையில் பெற்றோரை இருப்பதாலும், பிறரால் தத்து எடுத்துக்கொள்ளப்படுவதாலும் இப்படி நேரலாம்.
  • அதன்பின் காவல் அல்லது படைத்துறையில் சேர்ந்து முன்னேறுவான்
  • இவனை செவ்வாய் பார்த்தால் பயங்கரவாதியாக நேரலாம்.

பரணி 4ம் பாதத்தில் ராகு நின்றால்:

  • பால்காரணாகவும்,பால்பண்ணை தொழிலாலும் ஜீவனம்.
  • பிறருக்கு மிகவும் உதவுபவன்.
  • இவன் மனைவியுடன் ஒற்றுமை குறைவு.

பரணி 4ம் பாதத்தில் கேது நின்றால்:

  • நல்ல நீண்ட ஆயுள் உண்டு
  • கட்டடத் தொழில் குத்தகை, கலைத்திறன் இவற்றால் சம்பாத்தியம் உண்டு.
  • பெரிய மாளிகை எஸ்டேட் சொந்தக்காரன்.
  • இசையிலும் நுண் கலையிலும் தேர்ச்சி உண்டு.
  • வெண்புள்ளிகள், பால்வினை நோய், கண் நோய் முதலியவை ஏற்படலாம்.
காலசக்கர தசை
கடக சந்திரதசை 21 வருடம்
சிம்ம சூரியதிசை 5 வருடம்
மிதுன புதன் தசை 9 வருடம்
ரிஷப சுக்கிரன் திசை 16 வருடம்
மேஷ செவ்வாய் திசை 7 வருடம்
மீன குரு திசை 10 வருடம்
கும்ப சனி திசை- 4வருடம்
மகர சனி திசை 4 வருடம்
தனுசு குரு திசை 10 வருடம்
ஆகப் பரம ஆயுள 86 வருடம்

 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்லவேண்டிய ஆலயம் :

 

Leave a Comment

error: Content is protected !!