12 ராசிக்கும் சூரியன் தரும் பலன்கள்- வராக மிகிரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

12 ராசிக்கும் சூரியன் தரும் பலன்கள்- வராக மிகிரர்

மேஷம் – சூரியன்

மேஷத்தில் உள்ள சூரியன் தன் பரமோச்ச பாகத்தில் இல்லாமல் பிறந்தவன் எக்காரியத்தையும் வெற்றியாக முடிப்பவனாகவும், பிரசித்தி பெற்றவனாகவும், கொஞ்சமாக தனம் உடையவனாகவும், சஞ்சாரம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், ஆயுதம் தரித்தவனாகவும் இருப்பான்.

சூரியன் மேஷத்தில் தன் பரமோச பாகத்தில் இருக்க பிறந்திருந்தால் கெட்ட பலன்கள் இல்லாமல் நல்ல பலன்களை அடைபவனாகவும், அதிக தனம் உள்ளவனாகவும், அங்குமிங்கும் அலைந்து திரியாதவனாகவும், தானே ஆயுதத்தை எடுக்காமல் ஆயுதம் தரித்த சேனை மற்றும் சேவகர்கள் உடையவனாக இருப்பான்.

ரிஷபம்-சூரியன்

ரிஷபத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் சங்கீதம்-வாத்தியம் எனும் இசைக்கருவிகளில் தேர்ச்சி உடையவனாகவும், ஆடைகள்-வாசனை திரவியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து ஜீவிப்பவனாகவும், ஸ்திரிகள் என்னும் பெண்களை வெறுப்பதும்- தூஷனை செய்பவனாகவும் இருப்பான்.

மிதுனம்-சூரியன்

மிதுனத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் தனம் உள்ளவனாகவும், தனம் சம்பாதிப்பதில் அக்கறை அதிகம் உள்ளவனாகவும், வித்தைகள் சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் அறிந்தவனாகவும்,ஞானம் உள்ளவனாகவும் இருப்பான்.

கடகம்-சூரியன்

கடகத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் தரித்திரம் உள்ளவனாகவும், கடுமையாகவும் மற்றவர்களுக்கு அடங்காதவனாகவும், பிறருக்காக வேலை செய்பவனாகவும், வழி நடப்பதால் களைப்பு அடைபவனாகவும், துக்கம் உள்ளவனாகவும் இருப்பான்.

சிம்மம்-சூரியன்

சிம்மத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் பராக்கிரமம் உள்ளவனாக இருந்தாலும் புத்திசாலியாக இல்லாதவனாகவும், காடு-மலை-பசுக்கூட்டம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவனாகவும் இருப்பான்.

கன்னி-சூரியன்

கன்னியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் பெண்களின் சுபாவம் மற்றும் மென்மையான சரீரம் உள்ளவனாகவும், காவியம்-ஓவியம்-கணிதம்-வித்தை கல்வியில் சிறப்பு உடையவனாகவும், உலக அனுபவ ஞானம் உள்ளவனாகவும் இருப்பான்.

12 ராசிக்கும் சூரியன் தரும் பலன்கள்

துலாம்-சூரியன்

துலாத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் ஜாதி குலம் ஆகியவற்றுக்கு எதிரான பாப காரியங்களை செய்பவனாகவும்,மது அருந்துபவனாகவும், சஞ்சாரம் செய்வதில்- அலைந்து-திரிவதில்-வழி நடப்பதில் பற்றுள்ளவனாகவும்,ரஸவாதம் போன்றவற்றால் தாழ்ந்த உலோகங்களை தங்கம் போன்ற உயர்ந்த உலோகமாக மாற்றுபவனாகவும், மதுபானம் விற்பவனாகவும், தைரியம் உள்ளவனாகவும் இருப்பான்.

விருச்சிக-சூரியன்

விருச்சிகத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் மூர்க்கனாகவும், கெட்ட சுபாவம் உடையவனாகவும், முன்யோசனை இன்றி செயல்பட்டு தோல்வி அடைபவனாகவும், விஷசம்பந்தமானவற்றால் ஆதாயம் பெறுபவனாகவும், ஆயுதங்களை உபயோகித்து அதை பிரயோகம் செய்வதில் வல்லவனாகவும், ஆயுதம் தரிப்பவனாகவும் இருப்பான்.

தனுசு-சூரியன்

தனுசில் சூரியன் இருக்க பிறந்தவன் தனம் உள்ளவனாகவும், யோகி-ஞானி-சாதுக்களால் மதிக்கப்படுபவனாகவும், வைத்தியம், கைத்தொழில் ஆகியவற்றில் வல்லவனாகவும், சிறிய அளவில் வியாபாரம் செய்பவனாகவும், தைரியம் உள்ளவனாகவும், எதற்கும் பயப்படாத கடின சித்தம் உள்ளவனாகவும் இருப்பான்.

மகரம்-சூரியன்

மகரத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் குலத்துக்கு ஏற்புடையதாக இல்லாத அதர்மமான பாப காரியத்தை செய்பவனாகவும், புத்தி இல்லாதவனாகவும், நேர்மையாக வியாபாரம் செய்யாதவனாகவும், குறைந்த தனம் உள்ளவனாகவும், கஞ்சத்தனம் உடைய லோபியாகவும், பிறருடைய தனம்- சொத்துக்களை அடையும் ஆசையுள்ளவனாகவும் இருப்பான்.

கும்பம்-சூரியன்

கும்பத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் அற்ப புத்திர பாக்கியம் உள்ளவனாகவும், தரித்திரம் உள்ளவனாகவும், கீழ்த்தரமான தொழில் செய்பவனாகவும், சொத்துக்கள் சேர்க்க முடியாதவனாகவும் இருப்பான்.

மீனம்- சூரியன்

மீனத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் ஜலம் என்னும் நீரில் உண்டாகக்கூடிய முத்து-பவழம்-சிப்பி-சங்கு-மீன் உப்பு ஆகியவற்றை விற்பவனாகவும், பயிர்த்தொழில் செய்து ஜீவிப்பவனாகவும், சூரியன் அல்லது சந்திரன் உள்ள ராசிக்குரிய உடலின் பாகம் எனும் அவயத்தில் வடு-மரு- மச்சம் ஆகியவை உள்ளவனாக இருப்பான்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


Leave a Comment

error: Content is protected !!