கேது பகவானும்-திருமணமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

கேது பகவானும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7-ல் கேது

  • லக்கினத்திற்கு 7 – ல் கேது இருந்தால் , மனைவிக்கு நல்லதல்ல.
  • சிலருக்கு இல்லற வாழ்க்கை பாழாக்கிவிடுகிறது.
  • அனு தினமும் ஸ்திரீபோகன் , சில்லறை நோய்கள் அடிக்கடி ஏற்படும்.
  • தொழிலில் நல்ல பெயரோ பிரகாசமோ கிடைப்பது இல்லை.
  • பாபக்கிரக பார்வை சேர்க்கைப் பெற்று காணப்பட்டால் , பெற்றோரை மதிக்க மாட்டார்.
  • உடலில் மறைமுகமாக ஓர் நிரந்தர வியாதி ஏற்படும்.
  • கோபம் தலைக்கு மீறும்போது மற்றவர்களைக் கடுமையாகப் பேசி விடுவர்.
  • சந்தோஷமற்ற வாழ்க்கை குழந்தைகளால் கஷ்டம் , சிலருக்கு குழந்தைகளே பிறக்காது.
  • ரிஷப லக்கினத்தில் ராகுவும் , விருச்சிகத்தில் கேதுவும் அமைந்தவர்கள் நல்லதொரு மேடைப் பேச்சாளர் , அரசியலில் திறமைசாலி ஆகலாம்.
  • இவர் மனைவி இவரை நம்ப மாட்டார்.
  • காம இச்சை அதிகம் உள்ளவர்.
  • பொருள் நஷ்டம் , தாது நஷ்டம் , மனைவி விஷம் அருந்துதல் , கெட்ட பெண்களை விரும்புதல் , அவமானமடைதல் இவைகள் நடக்கும்.
  • மனைவிக்குப் பேய் , பிசாசுகளால் பீடை உண்டு , பலகீன முள்ள தாய்ப்பால் அற்ற மனைவி அமைவாள்.
கேது பகவானும்-திருமணமும்
கேது பகவானும்-திருமணமும்
  • 7 – ல் கேது – சூரியன் சேர்க்கை திருமணம் நடக்கும் . மனைவியிடம் மன வேற்றுமை உண்டு.
  • 7 – ல் கேது – சந்திரன் சேர்க்கை காதல் தோல்வி அல்லது மனைவி வேறு விதமாக அமையும்.தம்பதிகளின் ஆயுள் குறையலாம்.
  • 7 – ல் கேது – செவ்வாய் – சேர்க்கை காலங் கடந்து மணந்தாலும் சிறு பெண்ணையே மணப்பார்.
  • மனைவியைத் தவிர ஒரு விதவையின் நட்பும் ஏற்படும்.
  • 7 ல் கேது புதன் சேர்க்கை இளம் பெண்ணை மணப்பார்.இல்லறத்தில் செழுமை உண்டு.

மனைவியின் திக்கு -தெற்கு அல்லது வடக்கு திசையில் தாய் – தந்தை இருவர் வழியிலும் வரலாம்.

மனைவியின் நிறம் – மாநிறம் .

மனைவியின் குணம் -கெட்ட செயல்

மனைவி வரும் தூரம் சுமார் 15 மைல் களுக்குள்

கணவன் அல்லது மனைவி தொழில் -நீச்சத் தொழில்

7 – ல் கேது – குரு சேர்க்கை சம்பிரதாயப்படி திருமணம் ஏற்படுவது அரிது . உயர்குல மனைவி அமைவாள் .

7 – ல் கேது – சுக்கிரன் சேர்க்கை நல்லபடி திருமணம் நடக்கும் . வாழ்க்கை வசதி பெருகும் .

7 – ல் சனி – கேது சேர்க்கை திருமணம் நடப்பதே அரிது . கீழ்படிந்தவர்களின் தொடர்புகள் ஏற்படும் . மனைவிக்கு உடல் உபாதை , ரண சிகிச்சைகள் – மேலும் கர்ப்ப தோஷம் ஏற்படும்.

Leave a Comment

error: Content is protected !!