Homeநட்சத்திர ரகசியங்கள்பூராடம் நட்சத்திரம் பலன்கள் | குணங்கள், திருமணம், தொழில், அதிர்ஷ்டம் & பரிகாரம்

பூராடம் நட்சத்திரம் பலன்கள் | குணங்கள், திருமணம், தொழில், அதிர்ஷ்டம் & பரிகாரம்

பூராடம் நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தைப் பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில்
தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப,டா ஆகியவை. தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.

குண அமைப்பு:

பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன்வசம் வைத்திருப்
பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சினைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடுபட்டும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடும் பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடிமுதல் கால் நகம்வரை அழகுபடுத்துவார்கள். எந்தவொரு விஷயத்தையும்
எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும்கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழ மொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாடநூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போகப்போக சரியாகி விடும்.

குடும்பம்:

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின்மீது அதிக பாசம் இருக்கும்.அவர்களுக்காக வாழ்க்கைத் துணையையே ஒதுக்கிவிடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய்மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள்.பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மண வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள்,பசுமையைக் கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்குப் பிறகு சரியாகிவிடும்.

தொழில்:

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள். யோகம், தியானம் போன்றவற்றிலும், தற்காப்புக் கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு,வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி,மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலைதொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும்,சுதந்திர மனப்பான்மையும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி செய்யும் தொழில் முன்னேற்றம் அடைவார்கள். அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலும் செல்வாக்கு அதிகரிக்கும்.

நோய்கள்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக்கல், வயிற்றுப் புண், கீல்மூட்டுவாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும்.
ஜீரண கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

தசைப் பலன்கள்:

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்தி ராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் தசையாக வரும் சுக்கிர தசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு மீதமுள்ள தசா புக் திகளை அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர தசை
வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.

இரண்டாவதாக வரும் சூரிய தசைக் காலங்கள் 6 வருடமாகும். இத்தசையில் சிறு சிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.

மூன்றாவதாக வரும் சந்திர தசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.நான்காவதாக வரும் ராகு தசை 18 வருடங்கள் நடைபெறும். இந்த காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக தசையாக அமையும்.

விருட்சம்:

பூராட நட்சத்திரக்காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம் உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.

செய்யவேண்டிய நற்காரியங்கள்

ஆடு, மாடு, கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை, ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

சிதம்பரம்:

கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம். பஞ்ச பூதஸ்தலங்களில் ஆகாயத்தைக் குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம். சபாநாயகராக அருள்பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவகாம சுந்தரியும் அருள்பாலிக்கிறார் . பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.

நகர்:

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம். அப்பிரதீசுவரர் அருளாட்சி செய்யும் அற்புத ஸ்தலம்.

கடுவெளி:

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆகாசபுரீசுவரர் அருள்புரியும் ஸ்தலம்.

கூறவேண்டிய மந்திரம்

“ஓம் பஸ்சிமேசாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத் !!

பொருந்தாத நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகி யவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular