Homeநட்சத்திர ரகசியங்கள்நட்சத்திர ரகசியங்கள்:திருவோணம் நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள்:திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்திரண்டாவது இடத்தைப் பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும் இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும்.உடல் தொடை, தொடை எலும்பு, சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை. தொடர் எழுத்துக்கள் க, கா, கி, கீ ஆகியவை.

குண அமைப்பு:

திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக்கொள்வார்கள்.அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும்.தனக்கென தனிக்கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும், வாடிய பயிரைக் கண்டு வருந்திய வள்ளலார்போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் புகழைப் பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள். பசியை பொறுத்துக் கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும்
இருக்கும். இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.

குடும்பம்:

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவிமீதும் தாயின்மீதும் அதிக பாசம் இருக்கும்.பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். என்றாலும் எதையும்சமாளித்து முன்னேற்றமடைவார்கள். நீண்ட தலைமுடியும், அழகிய முகமும் இருக்கும். சிலநேரங்களில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதால் சிறு சிறுபிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். ஆடைஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள்மீது அதிக பாசமும்வைத்திருப்பார்கள். பிள்ளைகள்மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டுப்பொருட்களை வாங்கிசேர்ப்பார்கள். குடும்பத்தின்ஆதரவைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.உறவினர்களையும் நேசிப்பார்கள்.

தொழில்:

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள்.மக்களை நேசிப்பவராகவும், சமூகநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிருந்தே இசை, ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர்,வங்கிப் பணி, எழுத்தாளர், பேராசிரியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

நோய்:

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

தசைப் பலன்கள்:

திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால், முதல் தசையாக வரும் சந்திர தசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள். என்றாலும், பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இந்த காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.

இரண்டாவதாக வரும் செவ்வாய் தசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ் வாய் பலம்பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றமும், குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.

மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.

நான்காவதாக வரும் குரு தசைக் காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்.உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள்.வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.

ஐந்தாவதாக வரும் சனி தசைக் காலங்கள் சாதனைகளை செய்யவைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல், ஆடு, மாடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல்,உபநயனம் செய்தல், கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்கத் தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

விருட்சம்:

திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம்பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில் காணலாம்.

பரிகார ஸ்தலங்கள்

திருமுல்லைவாயில்:

சென்னைக்கு மேற்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம். மாசிலாமணீசுவரர்- கொடியிடை நாயகி அருள்பாலிக்கும்- எருக்கஞ்செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்.

எருக்கத்தம் புயூர் :

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திரபட்டினம் என்ற எருக்கத்தம்புயூரில் நீலகண்டேசுவரரும் நீலமலர்க்கண்ணி அம்பிகையும் அருள் பாக்கும் திருத்தலம்.

கூறவேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லபம்
விஷ்ணும் கமலபத்ராஷம்
தீயாயேத் கருட வாகனம்.

பொருந்தாத நட்சத்திரங்கள்

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular