பரணி நட்சத்திரம்
பரணியில் நின்ற சூரியனை சந்திரன் பார்த்தால்:
- பிறரிடம் பாசமும் அன்பும் உள்ளவன்
- ஆள் அடிமை உள்ளவன்.
பரணியில் நின்ற சூரியனை செவ்வாய் பார்த்தால்:
- கொடூர சித்தம் உள்ளவன்
- போர் ,படை, சண்டை போன்றவற்றில் பயிற்சி உள்ளவன்(சண்டை பயிற்சியாளர் )
பரணியில் நின்ற சூரியனை புதன் பார்த்தால்:
- நுண்கலை திரைப்படத்துறை, இசை, நாடகம் இவற்றில் திறமை உள்ளவன்.
- நகைச்சுவை திறனும் உண்டு.
பரணியில் நின்ற சூரியனை குரு பார்த்தால்:
- ஏழைகளுக்கு அதிக தானம் பண்ணுபவன்,
- பணக்காரன்,
- பெரிய அரசியல் பதவி அல்லது செல்வாக்கான அரசு உத்தியோகத்தில் இருப்பவர்,
பரணியில் நின்ற சூரியனை சுக்கிரன் பார்த்தால்:
- கீழ்மட்ட பெண்களுடன் சுற்றுபவன்,
- பணக்கஷ்டம் அதிகம்,
- சந்தர்ப்பவாதிகள்,
- இவனால் பயனடைவர் ஆனால் கஷ்டம் வரும் போது காலை வாரி விடுவார்கள்.
பரணியில் நின்ற சூரியனை சனி பார்த்தால்:
- இவன் சோம்பேறி, தரித்திரன்
பரணியில் நின்ற சந்திரனை சூரியன் பார்த்தால்:
- கடின சித்தம் உள்ளவன். ஆனால் தன்னை நாடியவர்களுக்கு உதவி செய்பவன்,
- சட்டத்தால் தண்டிக்கபடுவான் ,
- தாராள ஊதாரி செலவாளி ,
- தகப்பன் சேர்த்து வைத்த பணத்தில் சுகமாக வாழ்பவன்,
- கடினமான சுபாவமுள்ளவன்,
- கடமையை மறப்பவன்,
- சாதாரண அறிவாளி,
- பணக்காரன்,
- பிறருடன் பேசி ஜெயிப்பதில் சமர்த்தன்,
- உத்தியோகத்தில் இருப்பவர் ஆனால் தன் இஷ்டப்படி தான் நடப்பான்.
பரணியில் நின்ற சந்திரனை செவ்வாய் பார்த்தால்:
- கடின சுபாவமுள்ளவன் ,
- படித்தவன்,
- வேலைத் திறன் அதிகம்,
- உஷ்ண தேகம் உள்ளவன் ,
- சுயநலவாதி ,
- குறிக்கோள்களை அடைவதில் தீவிரம் உள்ளவன் ,
- கோபம் கொள்வான் ,
- தன்னை அதிகம் தம்பட்டம் அடித்து கொள்வான்
பரணியில் நின்ற சந்திரனை புதன் பார்த்தால்:
- எந்த நிலையிலும் திருப்திபடுபவன்,
- இனிமையாக பேசுவான்,
- தன் பேச்சால் பிறரை கவருபவன் ,
- கனவுலக சஞ்சாரி,
- எல்லாமே உயர்வாக இருக்க வேண்டும் என்று நம்புபவன் ,
- பிறரிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு.
- அதிகம் படித்தவன்.
பரணியில் நின்ற சந்திரனை குரு பார்த்தால்:
- சராசரி கல்வி ,
- சுகபோக விருப்பம் உள்ளவன்,
- தொழில் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பவன்,
- பணக்காரன்,
- அதிகம் குழந்தைகள் உள்ளவன்.
பரணியில் நின்ற சந்திரனை சுக்கிரன் பார்த்தால்:
- பாலுணர்வு அதன் மேல் இச்சையும் அதிகம் உள்ளவன்
- பெண்கள் மேல் நாட்டம் அதிகம்
- எப்போதும் பெண்களையே யோசனை கேட்பவேன்
- தர்க்கம் செய்யாதவன்,
- காதலில் நாட்டம் அதிகம்
- பொறுப்பு அதிகம் கிடையாது,
- சமூகத்தில் மேல் மட்டத்திலேயே பழகுபவன்
பரணியில் நின்ற சந்திரனை சனி பார்த்தால்:
- உடல்நலக் குறைவு,
- நோய் உண்டு,
- கடின சித்தம் உள்ளவன்
- பொய்யன்,
- பரணிக்கு அதிபதி சுக்கிரன் ஆகையால் அந்த ராசிக்கு சனி யோககாரகன் ஆகையால் அவ்வளவு கஷ்டம் இருக்காது.
பரணியில் நின்ற செவ்வாயை சூரியன் பார்த்தால்:
- கெட்டிக்காரன், நுண்ணறிவு உடையவன்
- பெற்றோரிடம் பாசம் உள்ளவன்,
- பணக்காரன்,
- பணக்காரர்கள் நடுவே கவுரவமான பொறுப்பை வகிப்பவன்,
பரணியில் நின்ற செவ்வாயை சந்திரன் பார்த்தால்:
- எப்போதும் பிற பெண்களிடம் மோகம் உள்ளவன்
- கடின சித்தம் உள்ளவன்
- காவல்துறையில் உத்தியோகம் உள்ளவன்,
- இரக்கமற்றவன்.
பரணியில் நின்ற செவ்வாயை புதன் பார்த்தால்:
- இவனும் பிற பெண்களிடம் நாட்டம் உள்ளவன்,
- ஆடம்பரம் வீன் கவுரவம் இவற்றில் மோகம் உள்ளவன்.
- பிறர் பணத்தில் இவனுக்கு நாட்டம் உண்டு.
- பெரும் கொள்ளைக்காரர்களும் கடத்தல்காரர்களும் இவர்களே. ஆனால் குரு பார்த்தால் இது இராது
பரணியில் நின்ற செவ்வாயை குரு பார்த்தால்:
- தன் குடும்பத்திலும் சமூகத்திலும் முதன்மை உள்ளவன்.
- இந்தவகையில் பிறரைவிட பணக்காரன் .
- சகிப்புத்தன்மையற்றவன் ,
- முன்கோபி.
பரணியில் நின்ற செவ்வாயை சுக்கிரன் பார்த்தால்:
- நல்ல உணவில் நாட்டம் இருக்காது,
- பெண்களையே சுற்றி திரிபவன்
- ஆனால் சமூகத்திலும் குடும்பத்திலும் இவனுக்கு நல்ல பதவி உண்டு .
பரணியில் நின்ற செவ்வாயை சனி பார்த்தால்:
- குடும்பத்திலும் உறவினர்களிடையே இருந்து பிரிந்து வாழ வேண்டிய நிலை வரும்
- இவனுக்கு தாயின் அன்பு கிடைக்காது
- மெலிந்த தேகி
- தன் குடும்பத்திற்கு எதிராகவே காரியங்களை செய்பவன்
–பலன்கள் தொடரும்