Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கடகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கடகம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026-கடகம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

7ல் ராகு

திருமணத்தடை, கணவன்-மனைவி உறவு பிரிவு உண்டாகும். குடும்பம் விட்டு பிரிந்து வெளியிடம், வெளிநாடு செல்ல நேரிடும்.உறவுகள் பிரிவாகும். சங்கடங்கள் தோன்றும். ஜென்ம விரோதம் ஏற்படும். பொருள் வழியில் நிறைய நஷ்டங்கள், தேவையற்ற வீண் விரயங்களும், செலவுகளும் ஏற்படும். பெண் வழியில் பிரச்சனை, வழக்கு, நோய் ஏற்படும். நண்பர்கள் வழியில் பகை தோன்றும். தொழில் வழியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. முதலீடுகளை கவனமுடன் கையாள வேண்டும். எதிலும் அவசரம் காட்டாமல் அனுசரித்து செல்ல வேண்டும்.

1-ல் கேது

தலைவலி, தலை நோய் ஏற்படும். குடும்பச் சண்டை. குடும்ப வெறுப்பு தோன்றும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உடல், மனம், புத்தி வழியாக சில சங்கடங்கள் தோன்றும். அலைச்சல், திரிச்சல் அதிகம் ஏற்படும். வாழ்வில் பிடிப்பு இருக்காது. என்னடா வாழ்க்கை என்று வேதாந்தம் பேச வைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை கீழப்பெரும்பள்ளம் சென்று அங்கு இருக்கும் ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular