Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:சிம்மம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

6-ல் ராகு

கோச்சாரராக 6-ல் இருப்பதால் எதிலும் வெற்றி வாய்ப்பு ஏற்படும். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடல் பிணிகள் ஆகலும். சேமிப்பு அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அந்தஸ்து, செல்வாக்கு உயரும். பொருளாதார ஏற்றம் உண்டாகும். வாக்குப்பலிதம், வெளியூர், வெளியிட பயணங்கள் மற்றும் அதன் வழியில் லாபங்கள் கிடைக்கும். அந்நிய ஜாதி, மதக்காரர்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும்.

12-ல் கேது

12ல் கேது இருப்பதால் விரைய செலவு ஏற்பட்டு விடும். இக்காலத்தில் வீடு வாங்கலாம், வீடு கட்டலாம், திருமண செலவுகள், சடங்குகள் போன்ற சுப காரிய செலவுகள் செய்யலாம். ஆடை, அணிகலன்கள், ஆபரண சேர்க்கைக்கு செலவு செய்ய வேண்டிய காலம். 6-மிட ராகு செலவு செய்ய வேண்டிய பணத்தை தருவார். சுப செலவுகளாக மாற்றி கொள்ள வேண்டும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். ஆன்மீக வழி சுற்றுலா செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற ஜாமீன், பொறுப்பு போன்றவற்றை தவிர்த்து விடுதல் நலம்.

பலன் தரும் பரிகாரம்

கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டு வர நற்செயல்கள் இன்னும் அதிகமாக நடக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular